ADDED : மார் 30, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நடந்தது.
ஜமாத் தலைவர் ராஜா முகமது தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், எஸ்.எஸ்.கல்விக் குழும நிர்வாகிகள் செந்தில், சந்திரசேகர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பஸ் நிலையம் முன் நீர் மோர் பந்தலையும், கிருங்காக்கோட்டை விலக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
விழாவில் சிவங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், செயல் அலுவலர் சண்முகம், தாசில்தார் பரிமளம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.