இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அ.தி.மு.க.,வினர் பங்கேற்பு
ADDED : மார் 16, 2026 07:31 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் அ.தி.மு.க, சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். இளையான்குடி நகர் செயலாளர் நாகூர் மீரா வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாரதி ராஜன், கோபி, சிவதேவ்குமார், சிறுபான்மை பிரிவு தேவதாஸ், இளையான்குடி பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தினர் பங்கேற்றனர்.
