/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயல் அலுவலர் இல்லாத இளையான்குடி பேரூராட்சி
/
செயல் அலுவலர் இல்லாத இளையான்குடி பேரூராட்சி
ADDED : செப் 21, 2024 05:36 AM
இளையான்குடி: இளையான்குடியில் கழிவு நீரை வெளியேற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி மின்பாதை அமைக்க வேண்டும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும்,
குப்பை கிடங்கில் குப்பை கொட்டாமல் அருகில் கொட்டி தீ வைப்பதால் ஏற்படும் புகையால் சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
இளையான்குடி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும், இளையான்குடி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியமனுவை மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் அகமது ஜலால் மற்றும் த.மு.மு.க., நகர செயலாளர் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம், மருத்துவ அணி நகர செயலாளர் அல்ஹாப் ஆகியோர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் அளித்தனர்.