தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தண்ணீரின்றி காய்ந்த கண்மாய்களால் விவசாயம் பாதிப்பு கால்நடைகளை காப்பாற்ற சமுதாய கிணறு தேவை

 தண்ணீரின்றி காய்ந்த கண்மாய்களால் விவசாயம் பாதிப்பு கால்நடைகளை காப்பாற்ற சமுதாய கிணறு தேவை

 தண்ணீரின்றி காய்ந்த கண்மாய்களால் விவசாயம் பாதிப்பு கால்நடைகளை காப்பாற்ற சமுதாய கிணறு தேவை


ADDED : மே 01, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி காரைக்குடியில், மழையை மட்டுமே நம்பி விவசாயம் நடந்துவரும் நிலையில், நிரந்தர விவசாயம் செய்திட கண்மாய்களில் சமுதாய போர்வெல் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறட்சி மாவட்டமாக சிவகங்கை உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் நடைபெறுகிறது. பெரும்பாலும் மானாவாரி விவசாயமே நடைபெறும், சிவகங்கை மாவட்டத்தில், ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன.

காரைக்குடி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 121 கண்மாய்களும் சாக்கோட்டை யூனியனில் 308 கண்மாய்களும், 375 ஊருணிகளும் உள்ளன. 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. மானாவாரி விவசாயம் மட்டுமே அதிகளவில் நடைபெறும் சாக்கோட்டை ஒன்றியத்தில், கோடை காலங்களில், மழை இல்லாததாலும் கண்மாய்களில் தண்ணீர் இல்லாததாலும் ஒரு போக விவசாயம் மட்டுமே நடைபெறுகிறது.

விவசாய நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. மேலும், கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், கால்நடைகள் தண்ணீர் தேடி அலையும் சூழலும் நிலவுகிறது. கால்நடை வளர்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

திருவேலங்குடி முருகப்பன் கூறுகையில்: ஆண்டுதோறும் ஆவணியில் நெல் விதைப்பில் ஈடுபடுவோம். தை மாதம் அறுவடையில் ஈடுபடுவோம். மழையை நம்பி உள்ளதால் ஒரு போக விவசாயமே நடைபெறுகிறது. தற்போது பங்குனி சித்திரை மாதங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கண்மாய்களில் தண்ணீர் இருப்பதில்லை.

விவசாயம் கேள்விக்குறியாவதோடு கால்நடைகள் வளர்ப்பதும் பெரும் சவாலாக உள்ளது. கண்மாய்களில் சமுதாய போர்வெல் அமைத்தால் விவசாயிகள் நிரந்தரமாக விவசாயப் பணியில் ஈடுபடுவதுடன் கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us