ADDED : மார் 13, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் துாய்மைப் பணியாளர் பற்றாக்குறையால் சுகாதாரப்பணிகள் பாதித்துள்ளது.
இவ்வொன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள இரண்டு முதல் ஆறு பேர் வரை, ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சில மாதங்களாக பலர் ஓய்வு பெற்ற நிலையில் பல ஊராட்சிகளில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளது. மீண்டும் துாய்மைப் பணியாளர்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் அனைத்து கிராமங்களிலும் குப்பை, கழிவு நீர் மேலாண்மை மோசமான நிலையில் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் சுகாதாரத்தை கையாள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதனால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் துாய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
