/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் மழைக்கு 44 வீடுகள் சேதம் 820 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
/
சிவகங்கையில் மழைக்கு 44 வீடுகள் சேதம் 820 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
சிவகங்கையில் மழைக்கு 44 வீடுகள் சேதம் 820 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
சிவகங்கையில் மழைக்கு 44 வீடுகள் சேதம் 820 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
ADDED : அக் 18, 2024 05:21 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இதுவரை 44 வீடுகள் பகுதி, முழுவதும் சேதமானது. மானாவாரி,கிணற்று பாசனம் மூலம் 1.25 லட்சம் ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்களில் 820 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கின.
வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் பரவலாக மிக கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், திருப்புத்துார், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் பலத்த மழை பெய்து, மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையால் கரந்தமலையில் இருந்து வரும் தண்ணீர் சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்காக ஓடியது. அழகர் கோயில் பகுதியில் பெய்த மழையால், ஏரியூர் கண்மாய் நிரம்பி வெள்ள நீர் மணிமுத்தாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
தொடர் மழைக்கு கிராமங்களில் உள்ள மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு, குடிசை வீடுகள் சேதமாகி வருகின்றன. நேற்று வரை இம்மாவட்டத்தில் பகுதி, முழுமையாக சேதமடைந்த வீடுகள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு, பேரிடர் மீட்பு நிதியாக பகுதி சேதமான வீட்டிற்கு ரூ.4,000, முழுவதும் சேதமான வீட்டிற்கு ரூ.8,000 வரை நிவாரணம் வழங்கியுள்ளனர். வெள்ள நீரில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.16 லட்சம் வரை நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது.
1.25 லட்சம் ஏக்கரில் 820 சேதம்
மாவட்ட அளவில் தேவகோட்டை, கல்லல், சிங்கம்புணரி, சிவகங்கை, காளையார்கோவில், கண்ணங்குடி, சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிணறு மற்றும் மானாவாரி மூலம் 1.25 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நெல் நடவு செய்து 10 நாட்களே ஆன நிலையில் தொடர் மழை பெய்ததால், 516 விவசாயிகளுக்கு சொந்தமான 820 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழைநீர் மூழ்கிய பயிர்களுக்கு அரசு இழப்பீடு அறிவிக்கும் பட்சத்தில் அத்தொகை கிடைக்கும் என தெரிவித்தனர்.