/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வடமஞ்சுவிரட்டு த.மா.கா., தலைவர் துவக்கி வைப்பு
/
திருப்புவனத்தில் வடமஞ்சுவிரட்டு த.மா.கா., தலைவர் துவக்கி வைப்பு
திருப்புவனத்தில் வடமஞ்சுவிரட்டு த.மா.கா., தலைவர் துவக்கி வைப்பு
திருப்புவனத்தில் வடமஞ்சுவிரட்டு த.மா.கா., தலைவர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 16, 2025 10:44 PM

திருப்புவனம்: திருப்புவனத்தில் த.மா.கா., சார்பில் நேற்று வட மஞ்சுவிரட்டு நடந்தது.
சிவகங்கை கோட்டாட்சியர் விஜய குமார் தலைமையில் நேற்று காலை 9:30 மணிக்கு வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். வடத்தில் கட்டி வைக்கப்படும் காளை ஒன்றுக்கு 20 நிமிடநேரம் ஒதுக்கினர். இக்காளையை அடக்க 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கினால் வீரர்களுக்கும், பிடிபடாத காளைக்கும் பரிசு வழங்கப்படும். வடமஞ்சுவிரட்டிற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து காளைகளும், வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டியை த.மா.காங்., தலைவர் ஜி.கே., வாசன் துவக்கி வைத்தார். மதுரை பார்க் பிளாசா ஓட்டல் உரிமையாளர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., உடையப்பன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ஐயப்பன், முத்துச்செல்வம் முன்னிலை வகித்தனர்.
வடமஞ்சு விரட்டு பேரவை மாநில நிர்வாகிகள் அந்தோணிமுத்து, செல்வம், முத்துப்பாண்டி பங்கேற்றனர். த.மா.கா., மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி, நகர் தலைவர் பாரத்ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

