ADDED : பிப் 24, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : லாடனேந்தலில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளிக்கான கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடந்தது.
லாடனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் ஒருகோடியே ஐம்பது லட்ச ரூபாய் செலவில் எட்டு வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. கூடுதல் வகுப்பறை கட்டடத்தை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.
வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், தொழிலதிபர் நவநீதகிருஷ்ணன், எம்.எல்.ஏ., தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி பங்கேற்றனர். தலைமையாசிரியை மீனா நன்றி கூறினார்.