நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவ நிர்வாகிகளுக்கு பதவியேற்பு விழா நடந்தது.
அறங்காவலர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். பள்ளி கல்விக் குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். எஸ்.டி.ஏ.தேவாலய போதகர் ராஜரத்தினம் ஜோன்ஸ் புதிய நிர்வாகிகளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். தாளாளர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் நினைவுப்பரிசு வழங்கினார்.