ADDED : ஆக 09, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் மகா சித்தர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயில் தவச்சாலை உள்ளது.
நேற்று ஆடி பூராட நட்சத்திரத்தன்று சுவாமிகளின் அவதார விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்களால் ஹோமம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி பூஜை மற்றும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஐம்பொன்னாலான உற்ஸவர் சிலை பூப்பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

