/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை கழிவில் தயாராகும் எரிபொருளால் வருமானம்! சிமென்ட் ஆலைக்கு தினமும் 10 மெட்ரிக் டன் கழிவு
/
குப்பை கழிவில் தயாராகும் எரிபொருளால் வருமானம்! சிமென்ட் ஆலைக்கு தினமும் 10 மெட்ரிக் டன் கழிவு
குப்பை கழிவில் தயாராகும் எரிபொருளால் வருமானம்! சிமென்ட் ஆலைக்கு தினமும் 10 மெட்ரிக் டன் கழிவு
குப்பை கழிவில் தயாராகும் எரிபொருளால் வருமானம்! சிமென்ட் ஆலைக்கு தினமும் 10 மெட்ரிக் டன் கழிவு
ADDED : மார் 28, 2024 11:26 PM

காரைக்குடி : காரைக்குடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 10 மெட்ரிக் டன் கழிவு சிமென்ட் ஆலைக்கு தினமும் அனுப்பப்படுகிறது.
காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி செய்கின்றனர். வீடுகள் தோறும் துாய்மை பணியாளர்கள் மூலம், மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பை சேகாரமாகிறது. இவ்வாறு சேகரமாகும் குப்பை அந்தந்த பகுதிகளில் குவிக்கப்பட்டு, லாரிகள் மூலம் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கு மற்றும் நுண்உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காரைக்குடி நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 46 மெட்ரிக் டன் வரை குப்பை சேகரமாகிறது. காரைக்குடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கழிவு தரம் பிரிக்கப்படுகிறது. அதில் நுண் உர செயலாக்க மையங்களின் மூலம் 15 மெட்ரிக் டன் உரமாக்கப்படுகிறது.
மேலும் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கழிவு தினமும் 10 மெட்ரிக் டன் அனுப்பிவைக்கப்படுகிறது.
இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு குப்பை கழிவும் அகற்றப்படுகிறது.
நகர் நல அலுவலர் திவ்யா; காரைக்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. நகராட்சியில் உள்ள நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் தினமும் 15 மெட்ரிக் டன் திடக்கழிவு உரமாக்கப்படுகிறது. வள மீட்பு மையங்கள் மூலம் 15 மெட்ரிக் டன் உலர் கழிவு சேகரமாகிறது. நாள் ஒன்றுக்கு 3.5 மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளும், 6.5 மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளும் பிரிக்கப்படுகிறது.
பிரிக்க இயலாத கழிவு உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கழிவு, மறுசுழற்சி செய்யப்பட்டு எளிதில் எரியக் கூடிய கழிவுகளாக மாற்றப்படுகிறது.
தினசரி 10 மெட்ரிக் டன் எரியக்கூடிய கழிவு சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

