/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முழுமை பெறாத ரேஷன் கடை: விற்பனையாளர் தவிப்பு
/
முழுமை பெறாத ரேஷன் கடை: விற்பனையாளர் தவிப்பு
ADDED : அக் 26, 2025 06:24 AM

தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியம் ஆறாவயல் மெயின் ரோட்டில் பேராட்டுக்கோட்டை ஊராட்சியில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெண் விற்பனையாளராக உள்ளார். கடைக்கான கட்டுமான பணி முழுமையடையாமல் அவசர கதியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தண்ணீர் வசதி இல்லை. புதிய கட்டடத்தின் வெளிப்புறத்தில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கழிப்பறைக்குரிய எந்த உபகரணங்களும் பொருத்தப்படவில்லை.
கழிப்பறை வசதி முழுமையாக இல்லாததால் பெண் ஊழியர் பயன்படுத்த முடியாமல் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியுள்ளது.கட்டடத்தின் மேலே வைக்க வேண்டிய தொட்டிக்கு இணைப்பு கொடுக்கவில்லை. தொட்டி அருகில் கழிவு நீர் குட்டையில் கிடக்கிறது. செப்டிக் டேங்க் மூடியும் தண்ணீரில் கிடக்கிறது. தேவகோட்டை ஒன்றிய அதிகாரிகள் கடையை பார்வையிட்டுபிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

