/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டிக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
/
பிள்ளையார்பட்டிக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED : நவ 10, 2025 12:27 AM

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டியில் விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் பிரதான ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் வருகை கூடுதலாக காணப்படும். அடுத்து கார்த்திகை துவங்கி தைப்பூசம் வரை பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். அய்யப்பன்,முருக பக்தர்கள் விரத காலங்களில் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்கின்றனர்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருகை காணப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகமாக வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அனைத்து நாட்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இதனால் தற்போது மதியம் கோயில் நடைசார்த்தப்படாமல் பக்தர்கள் சாமிதரிசனம் செய்கின்றனர். விரத காலம் கார்த்திகையில் துவங்கிய பின்னர் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

