/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் சிறு நீரக பாதிப்பு அதிகரிப்பு; சிதம்பரம் கவலை

ADDED : மார் 30, 2025 08:24 AM
காரைக்குடி : காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனைக்கு காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி நடந்து.
ரோட்டரி சங்கத் தலைவர் லட்சுமணன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் வாழ்த்தினார்.
அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தொடங்கி வைத்தனர்.
நன்கொடையாளர் நாராயணன், மாங்குடி எம்.எல்.ஏ., டாக்டர் குமரேசன், ரோட்டரி சங்கத் தலைவர் லட்சுமணன் செயலாளர் அடைக்கப்பன், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசும்போது:
சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது. இது எதனால் வருகிறது என்று தெரியவில்லை.குடிநீர் காரணமா அல்லது தட்பவெப்ப நிலை காரணமா என தெரியவில்லை. சிவகங்கை மாவட்டத்தில்,டயாலிசிஸ் இயந்திரம் தொடர்ந்து கொடுத்தாலும், டயாலிசிஸ் மிஷின்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றார்.