/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பிக்பாக்கெட் அதிகரிப்பு
/
திருப்புவனத்தில் பிக்பாக்கெட் அதிகரிப்பு
ADDED : ஜூலை 10, 2025 10:52 PM
திருப்புவனம்; திருப்புவனத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்கள் பலரிடமும் பிக்பாக்கெட் திருடர்கள் பர்ஸ், பேக் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் 29, என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததுடன் அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் நீதி விசாரணை வேண்டி திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பலரது பணம், பர்ஸ், அலைபேசி உள்ளிட்டவைகளை பிக்பாக்கெட் திருடர்கள் திருடிச் சென்றனர்.
அப்பாவிகள் பலரும் பணம், அலைபேசி உள்ளிட்டவற்றை பறிகொடுத்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை பலரும் பறிகொடுத்துள்ளனர்.
குறைந்த அளவு பணம் என்பதால் பலரும் போலீசில் புகார் அளிக்காமல் வேதனையுடன் திரும்பி சென்றனர்.