/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் காய்கறி விலை உயர்வு
/
மானாமதுரையில் காய்கறி விலை உயர்வு
ADDED : செப் 21, 2024 05:32 AM
மானாமதுரை: புரட்டாசியில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெயில் காணப்படுவதால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது.
மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் போன்று புரட்டாசி மாதத்திலும் வெயில் கடுமையாக காணப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் ஓரளவிற்கு மழை பெய்யும் என்பதால் காய்கறிகளின் விலையும் குறைத்து விற்பனை செய்யப்படும்.
ஆனால் தற்போது கடுமையான வெயில் அடித்து வருவதினால் கடந்த சில வாரங்களாக விலை குறைந்திருந்த காய்கறிகளின் விலை கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விலை உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20 க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.30 லிருந்து 35க்கும், சின்ன வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.40 க்கும்,பெரிய வெங்காயம் ரூ. 45 லிருந்து ரூ.70க்கும், கத்தரிக்காய் ரூ. 60 லிருந்து ரூ.80க்கும், கேரட், பீன்ஸ், அவரை ரூ.80லிருந்து ரூ.100க்கும், தேங்காய் ஒன்று சிறியது ரூ.25 லிருந்து ரூ.35க்கும், பச்சை மிளகாய் ரூ.60லிருந்து ரூ.80க்கும் விற்கப்படுகிறது.