UPDATED : ஆக 15, 2026 06:58 PM
ADDED : ஆக 15, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
* கண்டரமாணிக்கம் மெ.ஆச்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை (பொ) ஆனந்தி வரவேற்றார். ராமச்சந்திரன்,ஆதீனம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுஜாதா ராஜரெத்தினம் அறக்கட்டளை சார்பில் இரண்டு செட் சீருடை, புதிய மாணவிகளுக்கு ரூ 5 லட்சம் மதிப்பில் சைக்கிள், ஆட்டோடெக் நிறுவனர் ராஜரெத்தினம் வழங்கினார்.பெற்றோர் சங்க தலைவி ஆயிஷா நன்றி கூறினார்.
* கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்குழு தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலர் அழகு மணிகண்டன், பொருளாளர் அங்கப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியர் உஷா கொடியேற்றினார். முதுகலை தமிழாசிரியர் தங்கராசு வரவேற்றார்.
