ADDED : ஜூலை 12, 2025 11:46 PM
சிவகங்கை: இந்திய கம்யூ., 25வது மாவட்ட மாநாடு கல்லலில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சாத்தையா தலைமை வகித்தார். கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன் வரவேற்றார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, மாதர் சங்க மாநிலச் செயலர் கண்ணகி, விருதுநகர் மாவட்ட செயலர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசினர்.
47 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. சாத்தையா மாவட்டச் செயலராகவும், வழக்கறிஞர் மருது, கோபால் உதவி மாவட்ட செயலராகவும், மணவழகன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அரசுப் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
மதுரையில் இருந்து மேலுார் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் திருப்புத்துார் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குமார் நன்றி கூறினார்.