சிவகங்கை: சிவகங்கையில் இந்திய கம்யூ., அலுவலகத்தில் கட்சியின் நுாற்றாண்டு விழா, சுதந்திரப் போராட்ட வீரர் கம்யூ., தலைவர் நல்லகண்ணு நுாறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து கட்சி கொடி ஏற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் வக்கீல் மருது, கோபால், நகரச் செயலாளர் சகாயம், ஒன்றிய செயலாளர்கள் சின்ன கருப்பு, மாதவன் கலந்து கொண்டனர்.
* தேவகோட்டை நகர் மற்றும் தாலுகா இந்திய கம்யூ., நகர் செயலாளர் சுப்பையா தலைமையில் விழா நடந்தது. தியாகிகள் பூங்காவில் நினைவு துாணிற்கு மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர். மாவட்ட நிர்வாக குழு , விவசாயிகள் பிரிவு மாவட்ட செயலாளர் காமராஜ், நகர் பொருளாளர் கோவிந்தராஜன், நிர்வாகிகள் குமார், ஆரோக்கியம், சேக் அப்துல் காதர், கஸ்தூரி, மேரி பங்கேற்றனர்.