ADDED : ஜூலை 19, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை தெற்கு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட உதவி செயலாளர் வழக்கறிஞர் மருது, ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டி, கருப்பையா, சோனைமுத்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணி செய்யும் டாக்டர்கள் சிவகங்கையில் தனியாக கிளினிக் வைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் கவனம் செலுத்தாமல் மருத்துவம் பார்ப்பதை கண்டித்தும், மருத்துவக் கல்லுாரியில் அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து தரக்கோரியும். ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.