/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு

ADDED : டிச 21, 2025 03:25 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையம் 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பு படை வீரர்களுக்கு 44 வாரங்கள் பல்வேறு இன்னல்களைச் சமாளிக்கும் வகையிலான ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல், மலை ஏறுதல், நீச்சல், யோகா, தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
நேற்று 495 வது படைப் பிரிவைச் சேர்ந்த 1244 வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்து அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தலைமை வகித்தார். ஐ.ஜி., மனு மஹாராஜ் வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட 6 வீரர்களுக்கு பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கினார்.
வீரர்கள் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு வீர சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தங்கள் உறவினர்கள் பெற்றோர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.