/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விடுதி ஊழியர் கொலை; இருவர் பிடிபட்டனர்
/
விடுதி ஊழியர் கொலை; இருவர் பிடிபட்டனர்
ADDED : ஜன 20, 2024 01:02 AM
மானாமதுரை:மானாமதுரையில் விடுதி ஊழியரை கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குருந்தகுளம் ஆறுமுகம் மகன் மலையான் 63. இவர் மானாமதுரை சி.எஸ்.ஐ., காது கேளாதோர் பள்ளிக்கு எதிர்புறம் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்தார்.
இந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் ஈரோடைச் சேர்ந்த அம்பேத்கர் மகன் அஜித்குமார் 32, தனது அத்தையை வெட்டிய கொலை முயற்சி வழக்கில் நிபந்தனை ஜாமினில் மானாமதுரை ஸ்டேஷனில் கையெழுத்திடுவதற்காக கடந்த மூன்று வாரங்களாக தங்கினார்.
அங்கு மற்றொரு அறையில் மானாமதுரை க.ஆலங்குளம் தம்பிதுரையும் தங்கியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி அஜித் குமாரின் மொபைல் போன் காணாமல் போனதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த மலையான் தான் எடுத்து இருப்பார் என நினைத்து அவரிடம் கேட்ட போது அவர் மறுத்துள்ளார்.
கொலை
அன்று இரவு 8:00 மணிக்கு மானாமதுரை அரசகுழி மயானத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 3 பேரும் சென்று மது அருந்தி விட்டு அருகே வைகை ஆறு பாலத்துக்கு கீழே பேசிக்கொண்டிருந்தனர்.
அஜித்குமார், தம்பிதுரை ஆகியோர் மலையானிடம் மீண்டும் மொபைல் போனை கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் ஆயுதத்தால் கடுமையாக தாக்கி விட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த மலையானை விடுதி உரிமையாளர் ராமலிங்கம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.
மலையானை கொலை செய்ததாக அஜித்குமார், தம்பிதுரை மற்றும் போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக விடுதி உரிமையாளர் ராமலிங்கம் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தம்பிதுரை, ராமலிங்கத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய அஜித்குமாரை தேடிவருகின்றனர்.