ADDED : ஜூன் 21, 2025 11:35 PM

திருப்புத்துார்: தென்கரை மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவிகள் அடல் இன்னோவேஷன் போட்டியில் வெற்றி பெற்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான எதிர்கால தொழில்முனைவோரை விதைத்தல் போட்டியில் பங்கேற்றனர். சுகாதாரம்,பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு என்ற பொருளின் கீழ் சிறந்த தயாரிப்பு விருதை வென்றனர். 12ம் வகுப்பு மாணவி ஜேன் ப்ரீத்தி ஜெயபாரதன், இனியா , 10ம் வகுப்பு மாணவி நிஷா ஜோஷ்லின் வர்ஷாஸ்ரீ 9ம் வகுப்பு மாணவி திஷா, நித்திலா இக்குழுவில் பங்கேற்றனர்.
இப்பள்ளி மாணவிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மலிவு விலையில் தீர்வு கண்டுள்ளனர். 3டி டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்சுலினை உருவாக்கினர். அடல் டிங்கரிங் ஆய்வக திட்ட இயக்குநர் தீபாலி உபாத்யாய் மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கினார்.