/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிகளில் புத்தாக்க மேம்பாட்டு திட்டம்: கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
/
பள்ளிகளில் புத்தாக்க மேம்பாட்டு திட்டம்: கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
பள்ளிகளில் புத்தாக்க மேம்பாட்டு திட்டம்: கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
பள்ளிகளில் புத்தாக்க மேம்பாட்டு திட்டம்: கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
ADDED : பிப் 07, 2024 12:13 AM
சிவகங்கை : ''தமிழகத்தில் 4483 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவருக்கான தொழில் முனைவோர், புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி வழங்கப்படுகிறது,'' என அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் இன்ஜி., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்வி குழும தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
கல்லுாரி முதல்வர் ஆர்.ராஜா, கல்லுாரி இயக்குனர் முருகன், சிவகங்கை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜி.சம்பத்குமார் பங்கேற்றனர். தொழில் முனைவோர், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் மாவட்ட அளவில் 106 அரசு, உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் கட்டமாக 10 சிறந்த புதிய சிந்தனைகள் மாவட்ட அளவிலான துவக்க முகாமிற்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் தேர்வு செய்கிறது. நேற்று அரசனுாரில் நடந்த முகாமை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்து, மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு குறித்து கேட்டறிந்தார்.
4483 பள்ளிகளில் புத்தாக்க திட்டம்
கலெக்டர் பேசியதாவது, இத்திட்டமானது கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவன ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிதி ஆண்டில் தமிழகத்தில் 4,483 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து, வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களிடத்தில் புதிய கண்டுபிடிப்பு சிந்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு செயல்படுத்தும் இது போன்ற நல்ல திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல், மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகளை வெளியிட்டு சாதிக்க வேண்டும், என்றார். தொழில் முனைவோர் புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

