தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேவகோட்டை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேவகோட்டை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு


UPDATED : ஜூன் 09, 2026 03:23 PM

ADDED : ஜூன் 09, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 03:23 PM ADDED : ஜூன் 09, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:தேவகோட்டை அருகே எழுவங்கோட்டையில் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை தாலுகாவில் எழுவங்கோட்டை கொல்லங்கண்மாயில் கல்வெட்டு இருப்பதாக ஆறாவயல் பெரியய்யா,எழுவங்கோட்டை ஓய்வு பெற்ற அரசு அலுவலர் செல்லம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி வரலாற்று இணை பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இரு ஆராய்ச்சியாளர்களும் புதையுண்டு கிடந்த கல்லை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். பேராசிரியர் வேலாயுதராஜா கூறியதாவது:எழுவங்கோட்டையில் காணப்பட்ட கல்வெட்டு ஐந்து அடி உயரத்தில்,கல்லின் நான்கு புறத்திலும் மொத்தம் 78 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் இக் கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் ஆணை என்று துவங்குகிறது. இம் மன்னரின் கல்வெட்டு புதுக்கோட்டை, ராமநாதபுரம், சதுர்வேதி மங்கலம் அரண்மனை சிறுவயல், கம்பனூர் பகுதிகளில் காணப்படுகின்றன. இக் கல்வெட்டு வீரபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகிறது.

வீரபாண்டியனின் இதே ஆட்சியாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு திருப்புத்துார் பெரிச்சி கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகிறது. இங்கு காணப்படும் கல்வெட்டு பொது ஆண்டு 1296 முதல் பொது ஆண்டு 1342 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டாகும். இம்மன்னன் தன் ஆட்சிக்காலத்தில் 1311ல் மாலிக்காபூர் படையெடுப்பின் போதும் 1318 ல் முகமது பின் துக்ளக் ஆகியோரின் படையெடுப்பின் போதும் மதுரையைத் தவிர்த்து திருநெல்வேலி,திருச்சி, ராமநாதபுரம்,பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து உள்ளார்.

கார்த்திகை மாதத்தில் அரச ஆணை கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருப்பதால் தை மாதம் முதல் மார்கழி வரை என வரியாக நிச்சயித்து கூறப்பட்டிருக்கிறது. மேலும் கல்வெட்டு வெட்டிய பொன்பாதி உடையான் சுந்தர பாண்டிய காலிங்கராயன் ஆகிய அதிகாரிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. வீரபாண்டியனின் பெரிச்சிகோவில் கல்வெட்டிலும் அதிகாரியான காலிங்கராயன் பெயர் காணப்படுவதாக பேராசிரியர் வேலாயுராஜா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us