ADDED : அக் 03, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் வணிகவியலில் செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் கருத்தரங்கம் செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த்குமார், துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் குமார் வரவேற்றார். உதவி பேராசிரியர் சரண்யாதேவி, பேராசிரியர் நெடுமாறன், ஆசிரியர் மணவாளன், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் விளம்பரங்கள் பற்றி பேசினர். வணிகவியல் துறை தலைவர் செல்வபாக்கியம் நன்றி கூறினார்.