ADDED : ஜூன் 10, 2026 10:37 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:
ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கியது போல் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 58 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசுஅறிவிக்க வேண்டும்.
பணி ஓய்வுக்கு பின் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மருத்துவப் படி, மருத்துவ காப்பீடு தொடர்ந்து வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். அலைபேசி வழியாகவே ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வாழ்வுறுதி சான்று வழங்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
