/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டம் இதழால் அறிவுத்திறன் வளரும்
/
பட்டம் இதழால் அறிவுத்திறன் வளரும்
ADDED : செப் 20, 2024 06:55 AM

காரைக்குடி: காரைக்குடி ஆலங்குடியார் வீதி நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழை பிரபு டென்டல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். பிரபு வழங்கினார்.
தலைமையாசிரியர் கனகராஜ் வரவேற்றார்.
டாக்டர். பிரபு மாணவர்களிடம் கூறியதாவது:
மாணவர்களிடம் வாசிப்பு திறன் பழக்கம்குறைந்து வருகிறது. மாணவர்கள் வீட்டுக்குச் சென்றதும் பெற்றோரின் அலைபேசியை வாங்கிக்கொண்டு விளையாடுவதிலேயே முழுக் கவனம் செலுத்துகின்றனர்.
இது மாணவர்களின் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே அறவே அழித்து விடும். அதற்கு ஒரு புதிய வழிகாட்டியாக தினமலர் பட்டம் இதழ் மாணவர்களுக்கு கிடைத்துஉள்ளது.
அறிவியல் கண்டுபிடிப்புகள், கணிதம், ஆசிரியர்களின் அறிவுரை, பொது அறிவு, தொழில்நுட்பம் என பல தகவல்களுடன் வருகிறது. மாணவர்கள் இதனை ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினால் பாடப்புத்தகங்களை நாளை எளிதாகவும் ஆர்வத்துடன் படிக்க முடியும்.
நடுத்தர மற்றும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒரு அண்ணனாக எட்டு பள்ளிகளுக்கு இந்த பட்டம் இதழை வழங்கி உள்ளேன். மாணவர்கள் இதனை பயன்படுத்தி, படித்து அறிவுக் களஞ்சியமாக வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள்.