ADDED : டிச 06, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அமராவதிபுதுார் ராஜராஜன் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள் அமெரிக்காவை சேர்ந்த வாசன் கிடம்பி, சீனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட் அருண் அம்ப்ரோஸ் மற்றும் புனே என்.சி.எல்., ஆராய்ச்சியாளர் கார்த்திகேயன் பேசினர்.
அழகப்பா முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமை ஏற்றார். கல்லுாரி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார். செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் சுஜாதா பேசினார்.
கருத்தரங்கில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கம்ப்யூட்டர் இன்ஜி., துறைத்தலைவர் சுசில் குமார் நன்றி கூறினார்.

