UPDATED : செப் 03, 2026 05:32 PM
ADDED : செப் 03, 2026 02:10 PM
* வாழ்க்கை தரம் உயர்வு: ஆர்.கண்ணன் (சிவகங்கை): 1990ம் ஆண்டில் இருந்து ஏஜன்ட். இது நேர்மையான தொழில்.தொடக்கம் முதலே ஆர்வமுடன் நாளிதழ் விநியோகிக்கும் பணியை செய்து வருகிறேன்.
தினமலர் நாளிதழ் மூலம் தான் அனைத்து விஷயத்தையும் மக்கள் தெரிந்து கொள்கின்றனர்.உண்மையாக உழைத்ததால் தான் இன்றைக்கு நல்ல நிலையில் உள்ளோம். எந்த செய்தியாக இருப்பினும் உண்மையை விசாரித்து நேர்மையுடன் வெளியிடுவதால் தான் வாசகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
இன்னும் பல நுாறு ஆண்டுகள் வாசகர்கள் மனதில் தினமலர் நிலைத்து நிற்கும்.எங்களை வாசகர்களின் குடும்பத்தில் ஒருவர் போல் எண்ணி,அவர்களது குடும்ப நிகழ்ச்சிக்கு அழைத்து மரியாதை செய்கின்றனர்.கடும் வெயில்,மழை காலத்திலும் வாசகர்கள் வீடுகளில் நாளிதழை கொண்டு சேர்த்து விடுவோம்.தினமும் நாளிதழ் போட்டு தான் எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறோம்.
* மன நிறைவு தரும் ‛தினமலர்': எஸ்.பிச்சை கனி,
திருப்புத்துார் : 17 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் சப்ளை செய்து வருகிறேன். தரமான செய்தி வெளி வருவதால், ஏஜன்ட்களாகிய எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. வாசகர்களிடம் பிற நாளிதழை விட தினமலர் நாளிதழுக்கு வரவேற்பு கிடைப்பதால், எங்களுக்கு நாளிதழ் வினியோகம் செய்வது கூட சந்தோஷத்தை தருகிறது. என்ன தான் அலைபேசியில் பல தகவல்களை பார்த்தாலும், அதன் உண்மை தன்மையை கண்டறிய தினமலர் நாளிதழை தான் அனைவரும் நாடுகின்றனர். இதனால் ஏஜன்டாகிய எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுவதால், நாளிதழ் வழங்கும் எங்களுக்கும் இத்தொழில் மனநிறைவை தருகிறது.
* பொருளாதாரத்தில் வளர்ந்தேன்: ஏ.கலந்தர் மைதீன்,கே.கே.,நகர்,
காரைக்குடி :15 ஆண்டாக ஏஜன்டாக உள்ளேன். படிப்பறிவை வளர்க்கும் நோக்கில் நாளிதழ் வினியோகிப்பதை ஆர்வமுடன் செய்து வருகிறேன். இன்றைக்கும் வாசகர்கள் தினமும் காலை நாளிதழை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாளிதழ் போடும் பணியால் அதிகாலையில் எழுந்து 7:00 மணிக்குள் உழைத்து முடித்து விடுகிறோம். இதனால் மன, உடல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற தொழிலை விட இதில் ஊக்கத்தொகையை விட 25 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. நாளிதழ் வழங்கும் பணியை முறையாக செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இது தவிர பிறருக்கு பகுதி நேர பணி கொடுக்கவும் முடிகிறது.
ஏஜன்ட் பணி மூலம் இன்றைக்கு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளேன்.
* தலைமுறை ஏஜன்ட்: எம்.பாலசுப்பிரமணியன்,சிங்கம்புணரி : மூன்றாவது தலைமுறையாக தினமலர் நாளிதழ் ஏஜன்டாக உள்ளோம். எங்கள் கடைக்கு வந்து தினமலர் நாளிதழ் படித்தால் தான் திருப்தி என அலுவலர்கள் சொல்வார்கள். மற்ற தொழிலில் சம்பாதித்தாலும், வாசகர்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்கிறோம் என்ற முழு திருப்தி இருக்கிறது. சிந்தனை ரீதியாகவும் நல்ல நாளிதழாக உள்ளது. இதன் மூலம் தொடர்பு அதிகளவில் கிடைக்கிறது. தினமலர் ஏஜன்ட் மூலம் வாழ்வில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. வாசகர்கள் எதிர்பார்க்கும் செய்தி, விமர்சனம் கண்டிப்பாக தினமலரில் வருவதை வரவேற்கின்றனர். தவறை சுட்டிக்காட்டி,யாருக்கும் சார்பின்றி செய்தி வெளியிடப்படுகிறது. எந்தவித பிரச்னையும் இன்றி இல்லாமல் இருக்க தினமலர் தான் முழு காரணம். நான்காவது தலைமுறையாக என் மகன் (பி.இ., ஏரோநாட்டிக்) படிக்கிறார். இருப்பினும் அவரும் நாளிதழ் பார்சலை பிரித்து அனுப்பி வருகிறார்.
* பாலிசி திட்டத்தால் மகிழ்ச்சி: ஆர்.உதயகுமார் ,
மானாமதுரை: 14 ஆண்டாக ஏஜன்டாக உள்ளோம். ஆண்டு சந்தா அதிகமாக காரணம் செய்திகள்,படத்துடன் அதிகளவில் வருவதால் தான். குறிப்பாக இன்சூரன்ஸ் பாலிசி தருவது மக்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளது. செய்திகள் நேர்மையாக இருப்பதால், வாசகர்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. புரிந்து படிக்கும் விதமாக செய்திகள் எளிமையாக உள்ளது. அனைத்து தரப்பும் மக்களுடன் நல்ல பழக்கம், தொடர்பு கிடைக்கிறது. நாங்களும் வாசகர்களின் குடும்பத்தினர் போல் மதிக்கின்றனர்.
* ஏஜன்ட் பணி தந்த கவுரவம்: எம்.சுந்தர்ராஜ்,
கீழச்சிவல்பட்டி:2008 ல் இருந்து ஏஜன்ட். எங்கள் கடைக்கு முகவரி தந்ததே தினமலர் நாளிதழ் தான். அதிக வாசகர்களை கொண்ட நாளிதழாக 75 ஆண்டாக நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஏஜன்ட் பணி மூலம் மக்களிடம் எளிதில் பழகும் விதமாக கவுரவமான தொழிலாக உள்ளது. வாரமலர், ஆன்மிக மலர் வருவதால் அதிக வாசகர்கள் கிடைக்கிறார்கள். தினமலர் படித்தவர்கள் கண்டிப்பாக வேறு நாளிதழ் படிக்க மாட்டார்கள். மக்கள் விரும்பும் செய்தியை வெளியிடுவதில் தினமலருக்கு நிகர் அந்நாளிதழ் தான். போட்டி தேர்வுக்கு அதிகளவில் தினமலர் நாளிதழை தான் பார்க்கின்றனர். சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் செய்தியின் உறுதி தன்மை அறிய நாளிதழை தான் தேடி வருகின்றனர் என்றனர்.
