/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கார் ஏற்றி கொல்ல முயன்ற 'கார்த்திக்' பற்றி விசாரணை
/
கார் ஏற்றி கொல்ல முயன்ற 'கார்த்திக்' பற்றி விசாரணை
கார் ஏற்றி கொல்ல முயன்ற 'கார்த்திக்' பற்றி விசாரணை
கார் ஏற்றி கொல்ல முயன்ற 'கார்த்திக்' பற்றி விசாரணை
ADDED : ஆக 05, 2025 05:56 AM

திருப்புவனம்: மடப்புரம் கோவில் ஊழியரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு மதுரை பதிவெண் கொண்ட கார், வைகை ஆற்றுப்பாலத்தில் டூ - வீலரில் சென்ற மடப்புரம் கோவில் ஊழியர் கார்த்திக் மீது மோதியது. தடுமாறி விழுந்த கார்த்திக்கை அருகில் வந்து பார்த்த கும்பல், 'டேய் அந்த கார்த்திக் இல்லடா' எனக்கூறி, காரில் ஏறி சென்றனர்.
கார்த்திக் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். மடப்புரம் கோவில் ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் சாட்சிகளாக, உதவி கமிஷனரின் கார் டிரைவர் கார்த்திக்வேலு, அலுவலக ஊழியர் கார்த்திக்ராஜா உள்ளனர். அஜித்குமார் தரப்பு வழக்கறிஞரும் கார்த்திக் ராஜா தான்.
தி.வடகரையில் கலாம் கார்த்திக் என்பவர் அரசு திட்ட முறைகேடுகளை ஆர்.டி.ஐ.,யில் தகவல் பெற்று, வெளியிட்டு வருகிறார். காரில் வந்த கும்பல், எந்த கார்த்திக்கை தேடியது என தெரியவில்லை. இச்சம்பவத்தை சாதாரணமாக நினைக்காமல், போலீசார் தீவிரமாக விசாரிக்க, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

