/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாழடைந்த கட்டடத்தில் பாசனப்பிரிவு அலுவலகம்
/
பாழடைந்த கட்டடத்தில் பாசனப்பிரிவு அலுவலகம்
ADDED : அக் 21, 2025 03:33 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அலுவலக கட்டடங்கள் பாழடைந்ததால் நீர்வள ஆதாரத்துறையின் பாசனப் பிரிவு, வேறு கட்டடத்தில் நெருக்கடியில் செயல்படுகிறது.
இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் அருகே பொதுப்பணித்துறையின் கீழ்செயல்படும் நீர்வள ஆதார அமைப்பின் பாசன பிரிவு அலுவலகம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு கட்டடங்களில் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு, மேற்கூரை இடிந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலை இருப்பதால் அக்கட்டடங்கள் பூட்டப்பட்டு அருகே உள்ள பாலாறு வடிநில உபகோட்ட அலுவலக கட்டடத்தில் இட நெருக்கடியில் செயல்படுகிறது.
இந்த அலுவலக கட்டடமும் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த அலுவலகங்களுக்கு மக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே பாழடைந்த பாசனப் பிரிவு கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.