ADDED : ஆக 18, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள தென்னீர் வயல் கிராமத்தில் கண்மாயை ஒட்டி தார் ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரம் சிதைந்து வருகிறது.
இந்த சாலை வழியாக பனந்தோப்பு, மருத்தாணி, மணப்பட்டி கிராமத்திற்கு இணைப்பு சாலைகள் செல்கின்றன. மருத்தாணிக்கு தார்ச்சாலை போடப்பட்டு உள்ளது. ஆனால் மணப்பட்டி கிராமச்சாலை பல ஆண்டுகளாக ஜல்லி ரோடாகத்தான் உள்ளது.
மழை நீரால் ரோடு அரித்துள்ளது. ரோட்டோர பள்ளத்தில் கற்கள் சரிந்து அருகில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மணப்பட்டி ரோட்டை புதுப்பித்து தார்ச்சாலை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.