/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜவுளி வாங்கியவர்களுக்கு முதலீட்டு பத்திரம் வழங்கல்
/
ஜவுளி வாங்கியவர்களுக்கு முதலீட்டு பத்திரம் வழங்கல்
ஜவுளி வாங்கியவர்களுக்கு முதலீட்டு பத்திரம் வழங்கல்
ஜவுளி வாங்கியவர்களுக்கு முதலீட்டு பத்திரம் வழங்கல்
ADDED : அக் 09, 2025 11:19 PM
மதுரை: திருச்சி சாரதாஸ் நிறுவனம், அதன் வாடிக்கையாளரிடம் சேமிப்பு சிந்தனையை ஊக்கப்படுத்தவும், முதலீட்டுத் துறையில் உள்ள நவீன முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்கியவர்களுக்கு முதலீட்டு பத்திரத்தை வழங்கியது.
இதற்காக, ஜூலை 16 முதல் ஆக., 16 வரை ரூ.10 ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களில், தினமும் ஒருவர் வீதம் 32 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் பெயரில் நீண்ட கால அடிப்படையிலான 'மியூச்சுவல் பண்ட்' சேமிப்பு திட்டத்தில் நிறுவனம் சார்பில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டு, அதன் பத்திரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில், நிறுவன முதன்மை மேலாளர் தர்மலிங்கம், முதலீட்டு பத்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். நிர்வாகிகள் ஆனந்த்ராஜ், முருகேசன், ஆதிபின்சர்வ் வினோத் உடனிருந்தனர்.