sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனத்தில் அகத்திகீரை விவசாயம் குறைவால் சாகுபடி பரப்பளவும் குறைந்ததாக தகவல்

திருப்புவனத்தில் அகத்திகீரை விவசாயம் குறைவால் சாகுபடி பரப்பளவும் குறைந்ததாக தகவல்

திருப்புவனத்தில் அகத்திகீரை விவசாயம் குறைவால் சாகுபடி பரப்பளவும் குறைந்ததாக தகவல்


ADDED : மார் 24, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 05:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் அகத்தி கீரை விவசாயம் பெருமளவு குறைந்ததால் சாகுபடி பரப்பளவும் வெகுவாக குறைந்து வருகிறது.

திருப்புவனம் வெற்றிலை விவசாயத்திற்கு மிகவும் பெயர் பெற்ற பகுதி, வெற்றிலை விவசாயத்திற்கு அடிப்படையே அகத்தி தான் அகத்தி பயிரிட்டு மூன்று மாதத்திற்கு பின் வெற்றிலை கொடியை நடவு செய்வார்கள். அகத்தி கீரையின் நிழலில் வெற்றிலை கொடியும் வளரும். வெற்றிலை கொடி சரிந்து விடாமல் இருக்க காய்ந்த அகத்தி கீரை மரத்தில் தடுப்புகள் வைத்து வெற்றிலையை படர விடுவார்கள். அகத்தி கீரை வெற்றிலை கொடிகளுக்கு நிழலாக இருப்பதுடன் பொதுமக்களும் விரும்பி வாங்குவார்கள். அகத்தி கீரை தோல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க வல்லது.

எனவே பொதுமக்களும் அகத்தி கீரையை விரும்பி வாங்குகின்றனர். வெற்றிலை அறுவடை முடிந்தாலும் அகத்தி கீரை தொடர்ந்து வருமானத்தை தரும். அகத்தி மரத்தின் முற்றிய இலைகளை ஆடு, மாடுகளுக்கு தீவனமாகவும் இளம் இலைகள் சமையலுக்கும் பயன்படுத்தப்படும். திருப்புவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் தினசரி அகத்தி கீரை அறுவடை செய்து திருப்புவனம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். திருப்புவனத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அகத்தி கீரை பயிரிடப்பட்டு வந்த நிலையில் தற்போது வெறும் 50 ஏக்கரில் மட்டுமே பயிரிட்டுள்ளனர். வெற்றிலை விவசாயம் குறைய குறைய அகத்தி கீரை விவசாயமும் குறைந்து விட்டது. திருப்புவனம், கலியாந்தூர், நயினார்பேட்டை பகுதிகளில் மட்டும் அகத்தி பயிரிடப்பட்டு வருகிறது.

இது குறித்து விவசாயி கார்மேகம் கூறியதாவது,

வெற்றிலை கொடிகள் படர விட அகத்திகீரை பயிரிடுவோம். 3 ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை நடக்கும் என்பதால், அகத்தி மரம் ஓரளவிற்கு உதவியாக இருந்தது. காய்ந்த மரங்களை கொடி படர அகத்தி மரங்களுக்கு இடையே கட்டுவது வழக்கம். அகத்தி கீரைகளில் மஞ்சள் நோய் உள்ளிட்டவைகள் தாக்குதல் அதிகளவில் காணப்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அகத்தி மரங்களின் விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு மரம் ரூ.17 என விற்பனை செய்யப்படுகிறது. சவுக்கு மரம் ரூ.70, ஆனால் 5 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் தற்போது சவுக்கு கம்புகளையே பயன்படுத்துகிறோம். எனவே அகத்தி கீரை பயிரிடுவது குறைந்துவிட்டது, என்றார்.

/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us