ADDED : ஏப் 23, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : பழைய பென்ஷன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ -ஜியோ சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை ராமசந்திரா பூங்காவில் இருந்து ஊர்வலம் துவங்கியது. பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சகாய தைனேஷ், ராம்குமார் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் துவக்கி வைத்தார். மாநில உயர்மட்ட குழு சேதுசெல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நிறைவுரை ஆற்றினர். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

