ADDED : டிச 14, 2025 06:23 AM

சிவகங்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாய தைனேஸ் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழ மாநில தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் 2003 ஏப்.1க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சேவுகமூர்த்தி, கோவிந்தராஜ், தயானந்தன், உதயகுமார், மலைராஜ், டேவிட் அந்தோணி ராஜ், சேசுராஜ், ஆரோக்கியராஜ், நாகராஜன், வளனரசு, லதா, லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், பாண்டி பேசினர்.
