ADDED : டிச 28, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை :  சிவகங்கை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3,86,809 பேர்களுக்கு நகை அடமானத்தின் பேரில் ரூ.2,623.52 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு துறை மூலம் 34 வித கடன் வழங்கப்படுகிறது. சூசையப்பர் பட்டினம், முனைவென்றி, மழவராயனேந்தல், முப்பையூரில் தொடக்க கூட்டுறவு கடன் சங்க கிளைகளும், முத்துப்பட்டி, சிறாவயல், கொம்புக்காரனேந்தல், கழுவன்குளத்தில் விரிவாக்க மையங்களும் துவக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 87,828 விவசாயிகளுக்கு ரூ.530.15 கோடி பயிர்கடன், 33,904 பேர்களுக்கு ரூ.178.63 கோடி கால்நடை பராமரிப்பு கடன், 3,86,809 பேர்களுக்கு ரூ.2,623.52 கோடி நகை அடமான கடன், 3,916 மகளிர் குழுவிற்கு ரூ.278.56 கோடி கடன்  வழங்கப்பட்டுள்ளன.

