ADDED : மார் 11, 2026 05:19 AM

அ நிறம் | அளவு
திருப்புத்துார்: பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக்கல்லுாரி வேலை வாய்ப்பு மையத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முதல்வர் ஆனந்தி முகாமை துவக்கி வைத்தார். ஆர்சிட் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துணை மேலாளர் கருணாகரன், பிரசன்ன வெங்கடேசன் பங்கேற்றனர். ஆர்சிட் பார்மா நிறுவனத்தினர் பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர்.
மூன்றாமாண்டு மாணவர்கள் 150 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். ஏற்பாட்டினை வேலைவாய்ப்பு மைய அலுவலர் ரமேஷ், கெளரவ விரிவுரையாளர்கள் முத்துராமன், இளையராஜா, சஞ்சீவ் குமார், முருகேசன், பாலசுப்ரமணியன், கார்த்திக் ராஜு, ராகவன் செய்தனர்.
