தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டு குடிநீர் திட்ட குழாய்களுக்கு தீ வைப்பு

 கூட்டு குடிநீர் திட்ட குழாய்களுக்கு தீ வைப்பு

 கூட்டு குடிநீர் திட்ட குழாய்களுக்கு தீ வைப்பு


ADDED : மார் 29, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்:திருப்புவனத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மீது குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

திருப்புவனம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டவோ தரம் பிரிக்கவோ எந்த வித ஏற்பாடுகளும் இல்லை. எனவே பேரூராட்சி ஊழியர்கள் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீ வைத்து விடுகின்றனர். குப்பைகளில் அழுகிய பழங்கள், இறைச்சிகள், பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தையும் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அடர்த்தியான புகை கிளம்பி மூச்சு திணறல் ஏற்படுகிறது. திருப்புவனம் பழையூர் ரயில்வே பாலம் அருகில் பிளாஸ்டிக் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டி தீ வைத்ததால் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குப்பைகளுக்கு வைத்த தீயினால் குழாய்களும் சேதமடைவது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே திருப்புவனத்தில் குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us