தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாலை வசதி இல்லாத கலைமணி நகர்

சாலை வசதி இல்லாத கலைமணி நகர்

சாலை வசதி இல்லாத கலைமணி நகர்


ADDED : மே 07, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 02:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கலைமணிநகர், லட்சுமி நகரில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இலுப்பக்குடி கலைமணி நகர், பொன்நகர் பகுதி வளர்ந்து வரும் முக்கிய பகுதியாகும்.

இங்குள்ள கலைமணிநகர், லட்சுமிநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. லட்சுமி நகர் கலைமணி நகரில் 10 வருடங்களாக முறையான சாலை வசதியில்லை.

அப்பகுதியை சேர்ந்த கார்த்தி கூறுகையில்; கலைமணி நகர் மற்றும் லெட்சுமி நகரில் நாள்தோறும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கலைமணிநகர் ரோடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

பல வீதிகளில் 10 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை. சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவு நீர் செல்ல வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் சாக்கடை வீதியில் ஓடுகிறது. புதியதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us