/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில கலைத் திருவிழா போட்டி சிவகங்கைக்கு கலையரசி விருது
/
மாநில கலைத் திருவிழா போட்டி சிவகங்கைக்கு கலையரசி விருது
மாநில கலைத் திருவிழா போட்டி சிவகங்கைக்கு கலையரசி விருது
மாநில கலைத் திருவிழா போட்டி சிவகங்கைக்கு கலையரசி விருது
ADDED : ஜன 26, 2025 06:47 AM

சிவகங்கை :   தமிழகத்தில் மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறை மூலம் நடந்த கலைத் திருவிழா போட்டியில் சிவகங்கை மாவட்டத்திற்கு முதன் முறையாக கலையரசி விருது கிடைத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை மூலம் கலைத்திருவிழா போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் இப்போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட , மாநில அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் நடந்த போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 36 மாணவர்கள் 18 போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டங்கள் வழங்கப்படும்.
இந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கலையரசி விருதினை செவ்வியல் இசை மற்றும் நாட்டுபுறப் பாடல் போன்றவற்றில் சிறந்து விளங்கியமைக்காக சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவி லேனா என்பவருக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி  வழங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் முதன் முறையாக சிவகங்கை மாவட்டத்தில் கலையரசி பட்டம் பெறும் முதல் மாணவி இவர் தான்.
அதேபோல் பேச்சுபோட்டியில் மாநில அளவில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தொடக்கப்பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி மகிழினி என்பவருக்கும், பரதநாட்டியத்தில் முதலிடம் பெற்ற நாட்டரசன்கோட்டை கா.மு.சு.செ.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் குழுவிற்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

