/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோடு வசதி இல்லாத தயாநகர் கைவிரிக்கும் கல்குறிச்சி ஊராட்சி
/
ரோடு வசதி இல்லாத தயாநகர் கைவிரிக்கும் கல்குறிச்சி ஊராட்சி
ரோடு வசதி இல்லாத தயாநகர் கைவிரிக்கும் கல்குறிச்சி ஊராட்சி
ரோடு வசதி இல்லாத தயாநகர் கைவிரிக்கும் கல்குறிச்சி ஊராட்சி
ADDED : பிப் 13, 2024 06:39 AM

மானாமதுரை : கல்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் ரோடு, கழிவுநீர் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கல்குறிச்சி ஊராட்சி தயா நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மானாமதுரை நகராட்சியை ஒட்டியுள்ள விரிவாக்க பகுதி என்பதால் பலர் இங்கு வீடு கட்டி வருகின்றனர்.
தயா நகர் பகுதியிலிருந்து சிவகங்கை பைபாஸ் ரோடு செல்லும் வழியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லாத காரணத்தினால் தெருக்களில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. ரோடு வசதி இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் டூவீலர், சைக்கிளில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான ரோடு, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர், தெருவிளக்குவசதி இல்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.