/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லலில் எண்ணெய் பனை கன்று நடவு துவக்க விழா
/
கல்லலில் எண்ணெய் பனை கன்று நடவு துவக்க விழா
ADDED : நவ 18, 2024 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கல்லல் அருகே சன்னவனத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டத்தில் 16 எக்டேரில் எண்ணெய் பனை கன்று நடவு துவக்க விழா நடந்தது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 11 விவசாயிகள் 30 எக்டேரில் எண்ணெய் பனை கன்றுகளை நடவு செய்தனர். நடப்பு ஆண்டு முதற்கட்டமாக 16 எக்டேரில் நடவு செய்யும் துவக்க விழா நடந்தது. தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை வகித்தார்.
தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர், அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். ///