/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்நடை மருத்துவமனை இல்லாத கல்லங்குடி
/
கால்நடை மருத்துவமனை இல்லாத கல்லங்குடி
ADDED : ஜன 10, 2025 04:59 AM
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்தது கல்லங்குடி ஊராட்சி.  இந்த ஊராட்சியில் கல்லங்குடி, கல்லங்குடி புதுார்  உட்பட ஐந்து கிராமங்களும், சில குக்கிராமங்களும்  உள்ளன. 800 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கல்லங்குடி ஊராட்சியில் 600 க்கு மேற்பட்ட பசுக்கள், காளை கள் வளர்க்கப்படுகின்றன. 3 ஆயிரம் ஆடுகளும் வளர்க்கப்படுகிறது.  இங்கிருந்து பசும்பால் காரைக்குடி ஆவின் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் மாடுகள் ஆடுகள் கோழிகளுக்கு  ஏதாவது நோய் வந்தால் சிகிச்சை  பெற  கால்நடை மருத்துவமனை இல்லை.
நோய் பாதிப்பு வந்தால் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.  சிலர் அவசரத்திற்கு மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலை மாற கல்லங்குடியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கின்றனர்.
இது தொடர்பாக  வன்மீகநாதன் கூறுகையில், ஆடு மாடுகளுக்கு நோய் வந்தால், அல்லது அடிபட்டு காயம் அடைந்தால் சிகிச்சை  அளிக்க முடியவில்லை. கலெக்டரிடம்  கல்லங்குடியில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார்.

