/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் கந்த சஷ்டி விழா நிறைவு
/
தேவகோட்டையில் கந்த சஷ்டி விழா நிறைவு
ADDED : அக் 31, 2025 12:33 AM

தேவகோட்டை:  தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22ல் பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டப்பட்டு துவங்கியது. தினசரி சிறப்பு அபிஷேகம் விபூதி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவருக்கு அலங்காரம்  செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து ஆறு நாட்கள் லட்சார்ச்சனை நடந்தது. உற்ஸவமூர்த்தி முருகப் பெருமானுக்கு  அலங்காரம் செய்யப்பட்டு வாகனங்களில் வீதி உலா நடந்தது 6ஆம் நாள் சூரசம்ஹாரம் நடைபெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மறுநாள் தெய்வானை கல்யாணமும், அடுத்த நாள் வள்ளி திருமணமும் நடந்தது.
நிறைவு நாளான நேற்று விடையாற்றியை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேக, ஆராதனை நடந்து சஷ்டி விழா நிறைவடைந்தது.

