ADDED : ஜூலை 10, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடந்தது. 9 ம் நாள் போலீஸ் பாதுகாப்புடன் தேரோட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. நிறைவு நாளான பத்தாம் நாள் தீர்த்தவாரி நடந்தது.
சப்தாவர்ணத்தை முன்னிட்டு அனைத்து சுவாமிகளும் அருகில் உள்ள கல் மண்டபம் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகங்கள், அலங்காரம் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து வீதி உலா நடைபெற்று நேற்று அதிகாலை 4:30 மணியளவில் சுவாமி கோயிலுக்கு திரும்பினர். பூஜைகளை தொடர்ந்து சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழா நிறைவு பெற்றது.