/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டரமாணிக்கம் ரோடு இருவழிச் சாலையாக உயர்வு
/
கண்டரமாணிக்கம் ரோடு இருவழிச் சாலையாக உயர்வு
ADDED : ஜன 02, 2025 05:09 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் இருந்து கண்டரமாணிக்கம் செல்லும் ரோடு இருவழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி துவங்கியுள்ளது.
திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து தென்மாப்பட்டு வழியாக கண்டரமாணிக்கம் செல்லும் ரோடு தற்போது 5.5. மீ அகலத்தில் உள்ளது. தற்போது இந்த ரோடு 7 மீ. அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது.
தற்போது விஸ்தரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதில்  சில இடங்களில் பழைய இரும்பு மின்கம்பங்கள் இடையூறாக உள்ளன. அவற்றை அகற்றி தள்ளி வைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'திருப்புத்துாரிலிருந்து கண்டரமாணிக்கம் வழியாக காரைக்குடி செல்லும் ரோடு இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சில மின்கம்பங்கள் மட்டும் ரோட்டிற்குள் வருவதால் இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

