/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு
/
கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு
கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு
கண்மாய் பராமரிப்பு பணி; மத்திய நீர் ஆணைய குழு ஆய்வு
ADDED : ஜூலை 30, 2025 11:12 PM

காரைக்குடி; கல்லல் அருகே நடந்து வரும் கண்மாய் பராமரிப்பு பணிகளை மத்திய நீர் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.
காரைக்குடியில் நீர்வளத்துறை சார்பில், புனரமைப்பு, பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 9வது திட்டத்தின் கீழ் 36 கண்மாய்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு நிதி 60 சதவீதம், மாநில அரசு நிதி 40 சதவீத பங்களிப்புடன் பணிகள் நடந்து வருகிறது. கல்லல் அருகே உள்ள அன்னி கண்மாயில்
ரூ.1 கோடியே 27 லட்சத்து 98 மதிப்பில் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மத்திய நீர் ஆணைய குழு இயக்குனர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மத்திய நீர் ஆணையக் குழு துணை இயக்குனர் அஷ்ரப் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.