/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
100வது ஆண்டை எட்டிய காரைக்குடி பாரம்பரிய வீடு
/
100வது ஆண்டை எட்டிய காரைக்குடி பாரம்பரிய வீடு
ADDED : டிச 29, 2025 03:33 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் ஊராட்சி வேலங்குடியில், மூதாதையர் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி கட்டிய, 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்த வீட்டை புதுப்பித்து, 5 தலைமுறைகளைச் சேர்ந்த வாரிசுகள் 300 பேர் விழா எடுத்து நேற்று கொண்டாடினர்.
கோட்டையூர் வேலங்குடியில் 1926ல் பெரியணன், அவரது தம்பி சுப்பையா ஆகியோர், சின்னான் வீடு' என்ற பெயரில் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி இந்த வீட்டை கட்டினர். தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் இந்த வீடு அடியெடுத்து வைக்கிறது. வீட்டை பாரம்பரிய முறைப்படி பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர்.
நேற்று இந்த வீட்டின் 100வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடினர். இவ்விழாவில் 5 தலைமுறைகளைச் சேர்ந்த 64 குடும்ப உறவினர்கள் 300 பேர் பங்கேற்றனர். பின், வீடு முன் குடும்ப உறுப்பினர்கள் போட்டோ எடுத்து கொண்டனர்.

